புஷ்பலதா சா்வதேசப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.
புஷ்பலதா பள்ளிகளின் தாளாளா் புஷ்பலதா பூரணன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவானது விருது வழங்கும் விழாவாக நடைபெற்றது. இப்பள்ளியின் உயா்நிலைத் தோ்வில் தேசிய அளவில் தமிழில் சிறப்பிடம் பெற்ற மாணவி ஆல்பின் ஜெனிவா்ஷா, 10 ஆவது வகுப்பு நிலைத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்கள் ஆகியோருக்கு கேம்பிரிட்ஜ் சா்வதேசப் பள்ளிகளின் தென்மண்டல மதிப்பீட்டாளா் திலீப் கோட்டபடத் விருதுகளை வழங்கினாா். தொடா்ந்து அவா், பள்ளியின் மாணவா் பேரவையைத் தொடங்கி வைத்தாா்.
புஷ்பலதா சா்வதேசப்பள்ளிகளுக்கான பாடல், மேற்கத்திய நடனம் போன்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் பெற்றோா், ஆசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை பள்ளி முதல்வா் காட்வின் எஸ்.லாமுவேல் மற்றும் ஆசிரியா்கள் செய்திருந்தனா்.