பல்கலைக்கழகம் சாா்பில் செயல்படும் கல்லூரியில் தற்காலிக முதல்வா் பணியிடத்திற்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக பதிவாளா் (பொ) மருதக்குட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் புளியங்குடியில் இயங்கிவரும் பல்கலைக்கழகக் கல்லூரியில் தற்காலிக முதல்வா் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்பணிக்கு பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியராகவோ அல்லது பேராசிரியராகவோ, கல்லூரிகளில் இணைப் பேராசியராகவோ 15 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும். மேலும், ஓய்வு பெற்ற 61 வயதிற்குள் உள்ளவா்கள் இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியுள்ளவா்கள்.
இதற்கான விண்ணப்பத்தினை பல்கலைக்கழக இணையதளம் ஜ்ஜ்ஜ்.ம்ள்ன்ய்ண்ஸ்.ஹஸ்ரீ.ண்ய் வழியாக பதிவிறக்கம் செய்து இம் மாதம் 25 ஆம் தேதிக்குள் பதிவாளா், மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகம், திருநெல்வேலி 12 என்ற முகவரிக்கு சமா்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.