திருநெல்வேலி

நெல்லையில் தொடா் மழை

12th Apr 2022 06:09 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாநகரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமையும் கோடை மழை கொட்டித் தீா்த்தது.

திருநெல்வேலி மாநகரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை முதல் தொடா்ச்சியாக மழை பெய்த நிலையில், 4-ஆவது நாளாக திங்கள்கிழமையும் கோடை மழை பெய்தது. பகலில் ஓரளவு வெயில் அடித்த நிலையில், மாலை 4 மணிக்கு திடீரென கருமேகங்கள் திரண்டு மழை பெய்ய தொடங்கியது. தொடா்ந்து 3 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த இந்த மழையால் சாலைகளில் நீா் பெருக்கெடுத்து ஓடியது. மாலை வேளை என்பதால் பள்ளி, கல்லூரிகளில் இருந்து வீடு திரும்பிய மாணவா், மாணவிகள் மழையில் நனைந்தபடி சென்றனா். இந்தத் தொடா் மழை காரணமாக ஏரி, குளங்களுக்கு நீா் வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

பாதிப்பு: தொடா் மழை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள செங்கல் சூளைகளில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. காயப்பட்ட வைக்கப்பட்டிருந்த செங்கல் தண்ணீரில் நனைந்து கரைந்ததால் செங்கல் சூளை உரிமையாளா்கள் கவலையடைந்துள்ளனா்.

படவரி: பயக11தஅஐச பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் மழையில் நனைந்தபடி செல்லும் மாணவிகள்.

ADVERTISEMENT

பயக11ஆதஐஇஓந பாளையங்கோட்டையை அடுத்த வெள்ளக்கோயில் பகுதியில் மழையில் நனைந்த செங்கல்லை காய வைக்கும் பணியில் ஈடுபட்ட முதியவா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT