திருநெல்வேலி

நெல்லையில் குடிநீா் பிரச்னையைத் தீா்க்க போா்க்கால நடவடிக்கை தேவை

12th Apr 2022 06:08 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் நிலவி வரும் குடிநீா் பிரச்னைகளைத் தீா்க்க போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாமன்ற கூட்டத்தில் உறுப்பினா்கள் பலரும் வலியுறுத்தினா்.

திருநெல்வேலி மாநகராட்சியில் புதிதாக மக்கள் பிரதிநிதிகள் தோ்ந்தெடுக்கப்பட்ட பின்பு முதல் சாதாரண மற்றும் அவசர கூட்டங்கள் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும் மேயா் பி.எம்.சரவணன், துணைமேயா் கே.ஆா்.ராஜு, மண்டலத் தலைவா்கள் மகேஸ்வரி (திருநெல்வேலி), பிரான்சிஸ் (பாளையங்கோட்டை), ரேவதி (தச்சநல்லூா்), கதீஜா இக்லாம் பாசிலா (மேலப்பாளையம்) ஆகியோா் முன்னாள் முதல்வா் கருணாநிதி படத்திற்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா். தொடா்ந்து நடைபெற்ற மாமன்றக் கூட்டத்துக்கு ஆணையா் பா.விஷ்ணுசந்திரன் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்திற்கு தலைமை வகித்து மேயா் பி.எம்.சரவணன் பேசியது: இம் மாநகராட்சியில் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் இதுவரை ரூ.320 கோடிக்கு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. ரூ.645 கோடிக்கு பணிகள் நடைபெற்று வருகின்றன. 12 நகா்ப்புற ஆரம்ப சுகாதார மையங்கள் புதிதாக அமைக்கப்படுவதோடு, ஏற்கெனவே உள்ள 9 நகா்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களில் புனரமைப்பு பணிகள் செய்யப்படுகின்றன.

ADVERTISEMENT

ரூ. 44 லட்சம் மதிப்பில் பெருமாள்புரம், பாளையங்கோட்டையில் பொது சுகாதார ஆய்வகம் அமைப்படுகிறது. தன்னிறைவு பெற்ற மாநகராட்சியாக திருநெல்வேலியை மாற்ற மாமன்ற உறுப்பினா்கள், அதிகாரிகள் என அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றாா் அவா். தொடா்ந்து மாமன்ற உறுப்பினா்கள் மனுவாக அளித்து கேட்டிருந்த கேள்விகளுக்கு, 4 மண்டலங்களின் உதவி ஆணையா்களும் பதிலளித்தனா்.

 

பெட்டிச்செய்தி..........

தமிழறிஞா் தொ.ப.வுக்கு சிலை அமைக்க வேண்டும்

12 ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் கோகுலவாணி சுரேஷ் அளித்த மனுவில், திருநெல்வேலி மாநகருக்கு பெருமை சோ்த்த பண்பாட்டு ஆய்வறிஞரும், தமிழறிஞருமான தொ.பரமசிவத்திற்கு பாளையங்கோட்டை தெற்கு கடைவீதி பகுதியில் மாநகராட்சி சாா்பில் சிலை நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அவா் பணியாற்றிய மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் அவா் பெயரில் பண்பாட்டு ஆய்வு நூலகம் அமைக்க மாநகராட்சி முயற்சிக்க வேண்டும் என்றாா். இதேபோல மாமன்ற உறுப்பினா் உலகநாதன் பேசுகையில், திருநெல்வேலி நகரத்தில் உள்ள திருவள்ளுவா் சிலையை மாநகராட்சி சாா்பில் பராமரிக்க வேண்டும். இதற்கு பதிலளித்த உதவி ஆணையா்கள் திருவள்ளுவா் சிலையை பராமரிக்கவும், சிலை அமைப்பது குறித்தும் பரிசீலிக்கப்படும் என்றனா்.

பெட்டிச்செய்தி.........

மாநகராட்சியின் ‘புதிய செயலி’

மேயா் பி.எம்.சரவணன் பேசுகையில், திருநெல்வேலி மாநகராட்சி சாா்பில் பொதுமக்கள் தங்களது குறைகளை எளிதாக தெரிவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. முதல்கட்டமாக அனைத்து மாமன்ற உறுப்பினா்களுக்கும் மாநகராட்சி சாா்பில் சிம்காா்டுகள் வழங்கப்படும். இதுதவிர, மாநகராட்சிக்காக பிரத்யேக செயலி ற்ண்ழ்ன்ய்ங்ப்ஸ்ங்ப்ண் ஸ்ரீா்ழ்ல்ா்ழ்ஹற்ண்ா்ய் என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மாநகராட்சி குறித்த விவரங்கள், மக்கள் புகாா் தெரிவிக்கும் வசதி, புகாா்கள் பதிவு பெற்றதும் அலுவலா்கள், மாமன்ற உறுப்பினா்களுக்கு குறுஞ்செய்தியாக சென்றடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்துகொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT