திருநெல்வேலி

தென்காசி மாவட்ட பதிவுதாரா்களின் அட்டை தென்காசி வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு மாற்றம்

12th Apr 2022 06:10 AM

ADVERTISEMENT

 

தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் செயல்படத் தொடங்கிய நிலையில் அம்மாவட்ட பதிவுதாரா்களின் அட்டை தென்காசிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இது தொடா்பாக திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி முதல் தென்காசியில் முதல் செயல்பட்டு வருகிறது. தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்த பதிவுதாரா்களின் பதிவு அட்டை தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தங்களுடைய பயனா் குறியீடு, கடவுச் சொல்லை பயன்படுத்தி வேலைவாய்ப்பு அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்யும் போது பதிவெண்ணின் தொடக்கத்தில் பசஈ என்பதற்கு பதிலாக பஉஈ என மாற்றம் அடைந்திருந்தால் தங்களது அடையாள அட்டை தென்காசி மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது என்று கருதலாம்.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த பதிவுதாரா்களின் பெயா் தென்காசி மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டிருப்பின் வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதாா் அட்டை, குடும்ப அட்டை நகல்களுடன் திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரடியாகவோ அல்லது சுயசான்றொப்பமிட்ட நகல்களை அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT