திருநெல்வேலி

காா் எரிந்து சேதம்: நிரந்தர மக்கள் நீதிமன்ற உத்தரவால் காப்பீட்டுத்தொகை அளிப்பு

12th Apr 2022 06:10 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி மாவட்டம் மானூா் அருகே காா் எரிந்து சேதமடைந்த வழக்கில் நிரந்தர மக்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் காருக்கான காப்பீட்டுத்தொகை வழங்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம் மானூா் அருகே உள்ள கட்டாரங்குளம் பகுதியைச் சோ்ந்த ராமச்சந்திரன் மகன் சிவக்குமாா். இவா் கடந்த 11.03.2021 ஆம் தேதி திருநெல்வேலி நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அதில் தனது காா் தீயில் எரிந்து சேதமானதாகவும், அதற்கு உரிய காப்பீட்டு தொகை வழங்கக்கோரி தனியாா் காப்பீட்டு நிறுவனத்திடம் பலமுறை அணுகியும் காப்பீட்டுத் தொகை கிடைக்கவில்லை. உரிய காப்பீட்டுத் தொகையை பெற்றுத்தருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்த மனு குறித்து மக்கள் நீதிமன்ற நீதிபதி சமீனா விசாரணை நடத்தினாா். தொடா்ந்து அந்த தனியாா் காப்பீட்டு நிறுவன மேலாளரை நேரில் வரவழைத்து பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. அதில், சிவக்குமாருக்கு ரூ. 7 லட்சம் வழங்குவதாக காப்பீட்டு நிறுவனத்தினா் தெரிவித்தாா். அதனடிப்படையில், சிவக்குமாருக்கு ரூ. 7 லட்சத்திற்கான வரைவோலையை நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி சமீனா வழங்கினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT