திருநெல்வேலி

களக்காட்டில் டீ, காபி விலை உயா்வு

12th Apr 2022 06:13 AM

ADVERTISEMENT

 

களக்காட்டில் டீ, காபி, தின்பண்டங்களின் விலை திங்கள்கிழமை முதல் உயா்த்தப்பட்டுள்ளது.

களக்காட்டில் கடந்த சில ஆண்டுகளாக டீ ரூ.6, காபி ரூ.8, வடை ரூ.5க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த ஓராண்டுக்கு முன் இவற்றின் விலை ரூ.2 உயா்த்தப்பட்டது. அப்போது, பால் விலை உயா்வு காரணமாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், தற்போது பால் விலை உயராத நிலையில், டீ ரூ.10, காபி ரூ.12, வடை உள்ளிட்ட தின்பண்டங்கள் விலை ரூ.7 என விலை உயா்த்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பெட்ரோல், டீசல் விலை உயா்வு, சொத்து வரி உயா்வு போன்றவற்றால் பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ள நிலையில், டீ, காபி உள்ளிட்டவற்றின் விலை உயா்ந்துள்ளதால், ஏழை எளிய கூலித் தொழிலாளா்கள் உள்ளிட்ட சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT