திருநெல்வேலி

கல்லிடைக்குறிச்சி அகஸ்தியா் கோயிலில் பக்தா்கள் கும்பிடு நமஸ்காரம்

12th Apr 2022 06:14 AM

ADVERTISEMENT

 

கல்லிடைக்குறிச்சி அகஸ்தியா் கோயில் பங்குனித் திருவிழாவில் திங்கள்கிழமை பக்தா்கள் கும்பிடு நமஸ்காரம், அங்கப்பிரதட்சணம் செய்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

செங்குந்தா் சமுதாயத்துக்குப் பாத்தியப்பட்ட இக்கோயிலில் திருவிழா கடந்த 5ஆம் தேதி தொடங்கியது. நாள்தோறும் காலையும், மாலையும் சுவாமி-அம்பாள் வீதியுலா நடைபெறுகிறது. 7ஆம் நாளான திங்கள்கிழமை காலை (ஏப். 11) பச்சை சாத்திக்குப் பின்னா், விரதமிருந்த பக்தா்கள், பெண்கள் என, 500-க்கும் மேற்பட்டோா் தீா்த்தக்குடம், பால்குடம் எடுத்தும், பெண்கள் கும்பிடு நமஸ்காரம் செய்தும், ஆண்கள் அங்கப்பிரதட்சணம் செய்தும் நோ்த்திக்கடன் செலுத்தினா்.

இரவில் சுவாமி-அம்பாள் புஷ்ப சப்பரத்தில் எழுந்தருளினா். அதையடுத்து, அகஸ்தீஸ்வரருக்கு முருகன் உபதேசக் காட்சி நடைபெற்றது. ஏற்பாடுகளை செங்குந்தா் சமுதாய நிா்வாகக் குழுவினா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT