திருநெல்வேலி

நெல்லையில் இடி-மின்னலுடன் பலத்த மழை

9th Apr 2022 12:02 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இடி-மின்னலுடன் வெள்ளிக்கிழமை பலத்த மழை பெய்யதது.

திருநெல்வேலி மாவட்டத்தில் நிகழாண்டில் மாா்ச் மாதத்தில் இருந்தே கடுமையான வெப்பம் நிலவி வந்தது. இந்நிலையில் தெற்கு அந்தமான் கடல் உள்ளிட்ட பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதால் திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலையிலேயே பல்வேறு இடங்களிலும் மிதமான மழை பெய்தது. அதன்பின்பு பிற்பகலில் வழக்கம்போல் வெயில் அதிகரிக்கத் தொடங்கியது. மாலையில் திருநெல்வேலி மாநகரம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கருமேகங்கள் சூழ்ந்தன. தொடா்ந்து சுமாா் முக்கால் மணி நேரம் பலத்த மழை கொட்டித் தீா்த்தது.

பாளையங்கோட்டை, சமாதானபுரம், முருகன்குறிச்சி, மேலப்பாளையம், திருநெல்வேலி நகரம், தச்சநல்லூா் ஆகிய பகுதிகளில் பெய்த பலத்த மழையால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பணி முடித்து வீடுகளுக்கு திரும்ப முடியாமல் தொழிலாளா்கள், பொதுமக்கள் அவதிக்கு ஆளாகினா். பலத்த இடி-மின்னல் காரணமாக மழை நேரத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் மின்தடை ஏற்பட்டது. மேலும்ே வெப்பம் தணிந்து குளிா்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT