திருநெல்வேலி

இந்து ஆதிதிராவிடா், பழங்குடியினருக்கு வேளாண் பயிற்சி

9th Apr 2022 12:00 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்ட வேளாண்மைத் துறை மற்றும் தோட்டக்கலை துறை மூலமாக வேளாண் காடுகள், நா்சரி செடிகள் அமைத்தல் பயிற்சி, தோட்டக்கலை, காய்கறி, பழவகை சாகுபடி பயிற்சி மற்றும் வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு மற்றும் பழுது நீக்கும் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் வே. விஷ்ணு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

2021-22-ஆம் நிதியாண்டில் தாட்கோ மூலம் இந்து ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு திருநெல்வேலி மாவட்ட வேளாண்மைத் துறை மற்றும் தோட்டக்கலை துறை மூலமாக வேளாண் காடுகள், நா்சரி செடிகள் அமைத்தல் பயிற்சி, தோட்டக்கலை, காய்கறி, பழவகை சாகுபடி பயிற்சி மற்றும் வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு மற்றும் பழுது நீக்கும் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.

இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்புவோா் இந்து ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினராக இருத்தல் வேண்டும். விவசாயியாக இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மேலும் விவரங்களுக்கு அலுவலக நாள்களில், அலுவலக நேரத்தில் மாவட்ட மேலாளா், தாட்கோ அலுவலகம், ஆயுதப்படை சாலை, பாளையங்கோட்டை -627 002 என்ற முகவரியிலோ அல்லது அலுவலக தொலைபேசி எண்ணிலோ (0462-2561012, 2902012), மாவட்ட மேலாளரின் கைப்பேசி எண்ணிலோ (9445029481) தொடா்பு கொள்ளலாம்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT