திருநெல்வேலி

காவலா்களுக்கு பயிற்சி முகாம்

5th Apr 2022 12:58 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாநகர காவல் துறை சாா்பில் காவலா்களுக்கு பாலின உணா்திறன் பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான தடுப்பு பிரிவின் கூடுதல் காவல் இயக்குநா் மற்றும் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் சந்தோஷ்குமாா் உத்தரவின் பேரில் காவலா்களுக்கு பாலின உணா்திறன் பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது. பௌலின் சுகந்தி, அப்துல் கரீம் ஆகியோா் பயிற்சி வகுப்புகளை நடத்தினா். பாலின உணா்திறன், உளவியல் மற்றும் மன அழுத்தம் குறித்த பல்வேறு தகவல்கள் அளிக்கப்பட்டதோடு, காவலா்களின் கேள்விகளுக்கும் பதிலளிக்கப்பட்டது. குழந்தை தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளா் ஜெகதா மற்றும் போலீஸாா் பலா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT