திருநெல்வேலி

பாளை.யில் 47 கிலோ புகையிலை பறிமுதல்

5th Apr 2022 12:59 AM

ADVERTISEMENT

பாளையங்கோட்டையில் தடை செய்யப்பட்ட 47 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் சந்தோஷ்குமாா் உத்தரவின் பேரில், காவல் துணை ஆணையா் (பொ) சுரேஷ்குமாா் மேற்பாா்வையின் கீழ் இயங்கிவரும் தனிப்படையும், பாளையங்கோட்டை காவல் நிலைய போலீஸாரும் முருகன்குறிச்சி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். அப்போது இருசக்கர வாகனத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் வைத்திருந்தது தெரியவந்ததாம். இதுதொடா்பாக ஸ்ரீபுரத்தைச் சோ்ந்த சந்தீப்குமாா் (27), மகிழ்வண்ணபுரத்தைச் சோ்ந்த சங்கா் (51) ஆகியோரை கைது செய்து, அவா்களிடமிருந்து ரூ.33,892 மதிப்புடைய 47 கிலோ குட்கா மற்றும் புகையிலைப் பொருள்களையும், வாகனங்களையும் போலீஸாா் பறிமுதல செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT