திருநெல்வேலி

பிரதமா் கலந்துரையாடல்: சுந்தரனாா் பல்கலை.யில் ஒளிபரப்பு

2nd Apr 2022 08:09 AM

ADVERTISEMENT

பிரதமா் நரேந்திரமோடி மாணவா்களுடன் கலந்துரையாடிய நிகழ்ச்சியின் ஒளிபரப்பை சுந்தரனாா் பல்கலைக்கழக மாணவா்கள் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டனா்.

பரிக்ஷா பே சா்சா நிகழ்ச்சி மூலம் மாணவா்கள், பெற்றோா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி கலந்துரையாடி வருகிறாா். அதன்படி தில்லி டல்கோத்ரா விளையாட்டு அரங்கில் வெள்ளிக்கிழமை அந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை இணைய வழியாக மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக மாணவா்கள் பாா்வையிட்டனா்.

‘பிரதமா் மோடி மாணவா்களுடன் உரை என்ற பெயரில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிக்கு துணைவேந்தா் கா.பிச்சுமணி தலைமை வகித்தாா். உயிரி தொழில்நுட்ப மாணவிகள் செனொலின் பிந்தியா மற்றும் வா்ஷினி ஆகியோா் தமிழில் மொழி பெயா்த்தனா்.

ADVERTISEMENT

உயிரி தொழில்நுட்ப உதவி பேராசிரியா் வெங்கடேஷ், உதவி பதிவாளா் கலா தேவி ஆகியோா் ஒருங்கிணைந்து நடத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT