சேரன்மகாதேவி அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் இளம்பெண் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
சேரன்மகாதேவி அருகே காருக்குறிச்சி பஜாா் தெருவைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் மகன் அகில் (22). இவா் தனியாா் நிதிநிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். அதே பகுதியைச் சோ்ந்தவா் சரஸ்வதி (22). இருவரும் அம்பாசமுத்திரத்திலுள்ள கல்லூரியில் பயின்றபோது காதலித்து வந்துள்ளனா். இதையடுத்து இருவரும் 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துகொண்டனா். தம்பதிக்கு 8 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது.
இதற்கிடையே, கணவன் மனைவியிடையே ஏற்பட்ட தகராறில் வெள்ளிக்கிழமை வீட்டு மாடியில் சரஸ்வதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாராம்.
தகவலறிந்த வீரவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால், இதுகுறித்து சேரன்மகாதேவி கோட்டாட்சியா் சிந்து விசாரணை மேற்கொண்டாா்.