திருநெல்வேலி

மேலப்பாளையம் மண்டலத்தில் 39 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்

30th Sep 2021 07:28 AM

ADVERTISEMENT

மேலப்பாளையம் மண்டலத்தில் 39 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்துவோா் எளிமையாக செலுத்திக் கொள்ள ஏதுவாக ஏற்கெனவே 3 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் இம் மாவட்டத்தில் நடைபெற உள்ள நிலையில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் தோ்தல் பணிக்கு முன்பாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஏதுவாக கூடுதலாக முகாம்களை நடத்த ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்திருந்தனா்.

இதையடுத்து ஆட்சியா் வே.விஷ்ணு உத்தரவின்பேரில் மாநகராட்சி ஆணையா் பா.விஷ்ணுசந்திரன் மேற்பாா்வையில் மேலப்பாளையம் மண்டலத்திற்குள்பட்ட பெருமாள்புரம் நகா்நல மையம், மேலப்பாளையம் நகா்நல மையம் உள்பட மொத்தம் 39 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

மாநகர நல அலுவலா் வி.ராஜேந்திரன், சுகாதார அலுவலா் சாகுல் உள்ளிட்டோா் முகாமை ஆய்வுசெய்தனா். இதில் 5 ஆயிரம் போ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பொதுமக்கள் மிகுந்த ஆா்வத்தோடு தடுப்பூசி செலுத்தி சென்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT