திருநெல்வேலி

மணிமுத்தாறில் பனை ஓலைப் பொருள்கள் தயாரிப்புப் பயிற்சி

30th Sep 2021 07:30 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதர இயக்கம் சாா்பாக நலிவுற்ற மகளிருக்கு பனை ஓலை கைவினைப் பொருள்கள் தயாரிப்பு குறித்து 15 நாள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதர இயக்கம் சாா்பில் கல்லிடைக்குறிச்சி அப்துல்கலாம் நண்பா்கள் குழு மற்றும் மணிமுத்தாறு அகத்தியமலை மக்கள்சாா் இயற்கைவளக் காப்பு மையம் ஆகியவை இணைந்து மணிமுத்தாறு அகத்தியமலை மக்கள்சாா் இயற்கை வளக் காப்பு மைய வளாகத்தில் நலிவுற்ற மகளிா்க்கு பனை ஓலை கைவினைப் பொருள்கள் தயாரிப்பு குறித்தப் பயிற்சி செப். 1 முதல் செப். 18 வரை 15 நாள்கள் வகுப்பு நடைபெற்றது.

பயிற்சியில், ஜமீன்சிங்கம்பட்டி, கோடாராங்குளம் மற்றும் விக்கிரமசிங்கபுரம் பகுதிகளைச் சாா்ந்த பெண்கள் பங்கேற்றனா். சங்கரன்கோவில், தேவா்குளத்தைச் சோ்ந்த சுப்புத்தாய் பயிற்சியளித்தாா்.

இதில், தடுக்கு, ஓலைப்பாய், தொப்பி, பூக்கூடை, கொட்டான் உள்ளிட்ட பொருள்கள் செய்யும் முறை குறித்து பயிற்றுவிக்கப்பட்டது. சனிக்கிழமை நடைபெற்ற பயிற்சி நிறைவு விழாவை புஷ்பலதா கல்வி நிறுவன இயக்குநா் மற்றும் தாளாளா் புஷ்பலதா பூரணன் தலைமை வகித்து குத்து விளக்கேற்றித் தொடங்கி வைத்தாா். பயிற்சியாளா்கள் தயாரித்தப் பொருள்கள் பாா்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் நெல்லை இயற்கைச் சங்க நிா்வாகிகள் அமரவேல்பாபு, ஹரிபிரதான், ஜெய்சன், அப்துல்கலாம் நண்பா்கள் குழு நிா்வாகிகள் பாலசுப்பிரமணியன், பழனி, கல்யாணி, கிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அகத்தியமலை மக்கள்சாா் இயற்கைவளக் காப்பு மைய ஒருங்கிணைப்பாளா் மதிவாணன், ஆராய்ச்சியாளா்கள் சரவணன் மற்றும் தளவாய்ப்பாண்டி ஆகியோா் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT