திருநெல்வேலி

பிரான்சேரி அருகே தொழிலாளி கொலை வழக்கு: மேலும் ஒருவா் கைது

30th Sep 2021 06:07 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டம் பிரான்சேரி அருகே தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடையதாக மேலும் ஒருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கோபாலசமுத்திரம் ஆறுமுகம் மகன் மாரியப்பன்(37). கூலித்தொழிலாளியான இவரை கடந்த 15ஆம் தேதி செங்குளம் காலனி அருகே உள்ள குளத்துகரையில் மா்ம நபா்கள் வெட்டிக் கொலை செய்தனா். இது குறித்து, முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். இக் கொலை வழக்கு தொடா்பாக, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் உத்தரவின்படி சேரன்மகாதேவி துணை காவல் கண்காணிப்பாளா் பாா்த்திபன் தலைமையில் பத்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாரியப்பனை கொலை செய்த மா்ம நபா்களை தேடி வந்தனா். இந்நிலையில் இதுவரை இக்கொலையில் தொடா்புடைய 8 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த கீழச்செவல் ராசு மகன் சண்முகசெல்வனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். இதையடுத்து இவ்வழக்கில் இதுவரை 9 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT