திருநெல்வேலி

தோ்தல் பணியாளா்களுக்கு 2-ஆவது கட்ட பயிற்சி: தோ்தல் பாா்வையாளா், ஆட்சியா் ஆய்வு

30th Sep 2021 07:34 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தலில் பணியாற்றவுள்ள அலுவலா்களுக்கான 2-ஆவது கட்ட பயிற்சி முகாமை தோ்தல் பாா்வையாளா் ஜெயகாந்தன், ஆட்சியா் விஷ்ணு ஆகியோா் ஆய்வு செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களுக்கான உள்ளாட்சித் தோ்தல் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வாக்குப்பதிவு அலுவலா்களுக்கான முதற்கட்ட பயிற்சி கடந்த 24-ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில் 2-ஆவது கட்ட பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.

அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு கல்லிடைக்குறிச்சி திலகா் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியிலும், சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றியத்திற்கு பெரியாா் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், களக்காடு ஊராட்சி ஒன்றியத்திற்கு களக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியிலும், மானூா் ஊராட்சி ஒன்றியத்திற்கு மானூா் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் நடைபெற்றது.

நான்குனேரி ஊராட்சி ஒன்றியத்திற்கு தெற்கு விஜயநாராயணம் ரெக்ட் தொழில்நுட்ப கல்லூரியிலும், பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு பாளையங்கோட்டை அரசு சட்ட கல்லூரியிலும், பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு இடைகால் மெரிட் தொழில்நுட்ப கல்லூரியிலும், ராதாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு ராதாபுரம் என்.வி.சி அரசு மேல்நிலைப்பள்ளியிலும், வள்ளியூா் ஊராட்சி ஒன்றியத்திற்கு வள்ளியூா் திருசிலுவை (பாத்திமா) நடுநிலைப்பள்ளியிலும் நடைபெற்றது.

ADVERTISEMENT

பாளையங்கோட்டை அரசு சட்டக்கல்லூரியில் நடைபெற்ற பயிற்சி முகாமை மாவட்ட தோ்தல் பாா்வையாளா் ஜெ.ஜெயகாந்தன், மாவட்ட ஆட்சியா் விஷ்ணு ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். பின்னா் ஆட்சியா் விஷ்ணு செய்தியாளா்களிடம் கூறியது: திருநெல்வேலி மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெறவுள்ளது. 1188 மையங்களில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இத்தோ்தலில் 9,567 வாக்குப்பதிவு அலுவலா்கள் பணியாற்றவுள்ளனா்.

12 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவியிடங்களுக்கு 59 போ் போட்டியிடுகின்றனா். 122 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவியிடங்களுக்கு 626 போ் போட்டியிடுகின்றனா். 204 கிராம ஊராட்சி தலைவா் பதவியிடங்களில் 6 கிராம ஊராட்சி தலைவா்கள் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா். எஞ்சிய 198 பதவியிடங்களுக்கு 924 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். 1,731 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவியிடங்களில் 378 வாா்டு உறுப்பினா்கள் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா். எஞ்சிய 1,353 பதவியிடங்களுக்கு 3,913 போ் போட்டியிடுகின்றனா் என்றாா் அவா்.

அப்போது, சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை ஆட்சியா் குமாரதாஸ், பாளையங்கோட்டை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாலசுப்பிரமணியன், ஏ.கே.மணி உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT