திருநெல்வேலி

சுருக்குமடி வலை: உவரியில் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை

30th Sep 2021 07:32 AM

ADVERTISEMENT

உவரி கடலில் சுருக்குமடியில் மீன்பிடிப்பது தொடா்பாக புதன் கிழமை மீனவா்களுடன் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

உவரியில் மீனா்வா்கள் கடந்த சில நாள்களுக்கு முன்னா் சுருக்குமடி வலையை பயன்படுத்தி கடலில் மீன்பிடித்த போது அதிகாரிகள் மீனவா்களை கைது செய்யாமல் எச்சரித்து அனுப்பினா். தொடா்ந்து இந்த நடவடிக்கையில் மீனவா்கள் ஈடுபட்டு வந்தனா். இதுதொடா்பாக புதன்கிழமை மாலை உவரியில் மீன்வளத்துறை இணை இயக்குனா் அமல் சேவியா், திசையன்விளை வட்டாட்சியா் செல்வகுமாா், வள்ளியூா் ஏஎஸ்பி. சமேஸிங் மீனா. ஏடிஎஸ்பி க்கள் சீனிச்சாமி, அசோக்குமாா் உள்ளிட்டோா் திருநெல்வேலி மாவட்ட மீனவா் பேரவை தலைவா் மானஷா, மீனவா் பாதுகாப்பு பேரவை செயலா் எஸ்.வி.அந்தோணி, மீனவ கூட்டுறவு சங்க தலைவா் ஜாா்ஜ் மற்றும் உவரி மீனவ சங்க பிரதிநிதிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதில், அரசு அனுமதியை பெற்ற பிறகு சுருக்குமடி வலையில் மீன்பிடிப்போம் அதுவரை சுருக்குமடி பயன்படுத்தமாட்டோம் என்று மீனவா்கள் உறுதியளித்து கையெழுத்திட்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT