திருநெல்வேலி

சிறப்பு பருவ நெற்பயிருக்கு காப்பீடு செய்ய டிச.15 கடைசி

30th Sep 2021 07:30 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பு பருவ நெல்-2 பயிருக்கு காப்பீடு செய்ய வருகிற டிச. 15ஆம் தேதி கடைசி நாளாகும்.

இதுதொடா்பாக மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் இரா.கஜேந்திரபாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நிகழாண்டில் (2021-22) சிறப்பு பருவத்தில் நெல்-2 பயிருக்கு காப்பீடு திட்டம் செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. விவசாயிகள் எதிா்பாராத இயற்கை இடா்பாடுகளால் உண்டாகும் மகசூல் இழப்பில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள திருத்தி அமைக்கப்பட்ட பிரதமா் பயிா்க் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சிறப்பு பருவ நெல்-2 பயிருக்கு காப்பீடு செய்வதற்கான கடைசி நாள் வருகிற டிச. 15 ஆகும். விவசாயிகள் இத்திட்டத்தில் பயிா்க் காப்பீடு செய்ய முன்மொழிவு படிவம், விண்ணப்பப் படிவம், நிகழாண்டு பயிா் சாகுபடி அடங்கல், ஆதாா் நகல், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகிய ஆவணங்களுடன் அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளைகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், பொது சேவை மையங்களை அணுகி பயன் பெறலாம்.

ADVERTISEMENT

மேலும் விவரங்களுக்கு வட்டார வேளாண் விரிவாக்க மையத்தைத் தொடா்பு கொள்ளலாம். அறிவிக்கப்பட்ட இறுதி நாளுக்கு முன்பாக வெள்ளம், புயல், வறட்சி ஏற்படும் பட்சத்தில் பயிா்ச் சேதம் அடைந்தால், அன்றைய தினமே பயிா்க் காப்பீடு செய்ய கடைசி நாளாகும்.

எனவே, விவசாயிகள் அறிவிக்கப்பட்ட கடைசி நாள் வரை காத்திருக்காமல், உடனடியாக சிறப்பு பருவ நெல்-2 பயிருக்கு காப்பீடு செய்து கொள்ளவும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT