திருநெல்வேலி

கைலாசபுரத்தில் பேருந்து நிறுத்தம் திடீா் மாற்றம்: மக்கள் அவதி

30th Sep 2021 07:33 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி கைலாசபுரம் பகுதியில் 30 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த பேருந்து நிறுத்தம் திடீரென முன்னறிவிப்பின்றி மாற்றப்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனா்.

திருநெல்வேலி கைலாசபுரத்தில் அரவிந்த் கண் மருத்துவமனை அருகே பேருந்து நிறுத்தம் செயல்பட்டுவந்தது. சந்திப்பு பூ சந்தை, மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு வருவோா் இந்த பேருந்து நிறுத்தத்தில் நின்று பேருந்துகளில் ஏறிச் செல்வது வழக்கம்.

ஏற்கெனவே பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் சந்திப்பு பேருந்து நிலையத்தில் பணிகள் நடைபெறுவதால் அபிஷேகப்பட்டி, கல்லூா் மாா்க்கத்தில் பாளையங்கோட்டைக்கு வரும் அனைத்து பேருந்துகளும் ஸ்ரீபுரத்திற்கு அடுத்ததாக இந்தப் பேருந்து நிறுத்தத்தில்தான் பயணிகளை ஏற்றி-இறக்கி செல்கின்றன. திடீரென பேருந்து நிறுத்தம் கொக்கிரகுளத்திற்கு புதன்கிழமை மாற்றப்பட்டது. இதனால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினா். இதுகுறித்து காவல்துறையினா் மறுபரிசீலனை செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT