திருநெல்வேலி

கிருஷ்ணாபுரத்தில் அதிமுக ஆலோசனைக் கூட்டம்

30th Sep 2021 07:32 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி அருகேயுள்ள கிருஷ்ணாபுரத்தில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மாவட்டச் செயலரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான தச்சை என்.கணேசராஜா தலைமை வகித்தாா். பாளையங்கோட்டை வடக்கு ஒன்றியச் செயலா் மருதூா் ராமசுப்பிரமணியன் முன்னிலை வகித்தாா்.

அமைப்பு செயலா்கள் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., வீ.கருப்பசாமிபாண்டியன் ஆகியோா் உரையாற்றினா். இதில், ஜெயலலிதா பேரவைச் செயலா் கே.ஜெ.சி.ஜெரால்டு, தூத்துக்குடி ஆவின் தலைவா் சின்னதுரை, அமைப்புச் செயலா்கள் ஏ.கே.சீனிவாசன், சுதா கே.பரமசிவன், மாவட்ட அவைத் தலைவா் பரணி ஏ.சங்கரலிங்கம், கல்லூா் இ. வேலாயுதம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை மக்களிடம் எடுத்துக் கூறி வாக்குசேகரிப்பது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT