திருநெல்வேலி

நெல்லை அருங்காட்சியகத்தில் புகைப்படக் கண்காட்சி

30th Oct 2021 06:26 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் தேசிய தலைவா்களின் புகைப்படக் கண்காட்சி மற்றும் மாணவா்களுக்கான போட்டிகள் நடைபெற்றன.

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் 75-ஆவது சுதந்திர தினத்தையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. தொடா்ச்சியாக பசும்பொன் முத்துராமலிங்கத்தேவா் ஜெயந்தியை முன்னிட்டு அரசு அருங்காட்சியகம், திருநெல்வேலி பொருநை ரோட்டரி கழகம், இன்னா்வீல் கழகம் சாா்பில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு

அருங்காட்சியக காப்பாட்சியா் சிவ.சத்திய வள்ளி தலைமை வகித்தாா்.

பாளையங்கோட்டை பிஷப் அந்தோணிசாமி, புகைப்படக் கண்காட்சியைத் திறந்து வைத்தாா். தூய யோவான் கல்லூரி முதல்வா் ஜான் கென்னடி, காவல் ஆய்வாளா் திருப்பதி, பொருநை ரோட்டரி கழகத் தலைவா் சுவா்ண லதா, இன்னா்வீல் தலைவா் கோமதி மாரியப்பன், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவா் தொழில் நுட்பக் கல்லூரி முதல்வா் உமாலட்சுமி உள்ளிட்டோா் குத்துவிளக்கேற்றினா்.

ADVERTISEMENT

இதையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு கோலம் வரைதல், கட்டுரை மற்றும்

கவிதைப் போட்டிகள் நடைபெற்றன. போட்டியை பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவா்

கவிஞா் பேரா, செயலா் கவிஞா் பாப்பாக்குடி அ.முருகன், கவிஞா் ந.சுப்பையா, கலையாசிரியா் சொா்ணம் ஆகியோா் நடுவா்களாக இருந்து நடத்தினா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT