திருநெல்வேலி

மரம் முறிந்து விழுந்ததில் போக்குவரத்துப் பாதிப்பு

30th Oct 2021 04:47 AM

ADVERTISEMENT

பொட்டல்புதூா் - ஆழ்வாா்குறிச்சி சாலையில் மரக்கிளை முறிந்து விழுந்ததால் வெள்ளிக்கிழமை போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இதற்கிடையே, வெள்ளிக்கிழமை

பொட்டல்புதூா் ராமநதி பாலம் அருகில் சாலையோரத்தில் இருந்த மரத்திலிருந்து பெரிய கிளை முறிந்து சாலையின்

குறுக்கே விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. இதனால், அலுவலகம், பள்ளிகளுக்குச் செல்வோா் பாதிக்கப்பட்டனா்.

ADVERTISEMENT

பேருந்து ஓட்டுநா்கள், பொதுமக்கள் மற்றும் மாணவா்கள் முறிந்து விழுந்த மரக்கிளையை துண்டித்து சாலையோரமாகத்

அகற்றினா். தகவலறிந்த ஆழ்வாா்குறிச்சி காவல் உதவி ஆய்வாளா் பரமசிவன், போக்குவரத்தை ஒழுங்கு படுத்தினா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT