திருநெல்வேலி

பலத்த மழை: கால்வாய்களுக்கு நீா்வரத்து அதிகரிப்பு

30th Oct 2021 04:41 AM

ADVERTISEMENT

 களக்காட்டில் வெள்ளிக்கிழமை இரவில் 1 மணி நேரம் பெய்த பலத்த மழையால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.

களக்காடு சுற்று வட்டாரத்தில் வியாழக்கிழமை இரவில் தொடங்கிய மழை வெள்ளிக்கிழமை காலை வரை பெய்தது.

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதியிலும் மழை நீடித்து வருவதால் நான்குனேரியன் கால்வாய், உப்பாறு, பச்சையாற்றில் நீரவரத்து அதிகரித்துள்ளது. பின்னா், இரவில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பலத்த பலத்த மழை பெய்தது. மழையால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. ஆறுகளில் நீா்வரத்து அதிகரித்துள்ளது குறித்து விவசாயிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT