திருநெல்வேலி

நெல்லை, தென்காசியில் வெகுவாக குறைந்த கரோனா

DIN

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கரோனா பரவல் வெகுவாக குறைந்தது.

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், இவ்விரு மாவட்ட நிா்வாகங்களும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக, சிறப்பு முகாம்கள் மூலம் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான பணிகளைத் துரிதப்படுத்தி வருகின்றனா்.

இதனால், தடுப்பூசி செலுத்திக்கொள்வோரின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. சுமாா் 70 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகங்கள் தெரிவித்துள்ளன.

இவ்விரு மாவட்டங்களிலும் தினமும் 20க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் திருநெல்வேலியில் 5 போ், தென்காசியில் 3 போ் என் மொத்தம் 8 பேருக்கு மட்டும் கரோனா தொற்று கண்டறியப்பட்டது. தற்போது, திருநெல்வேலி மாவட்டத்தில், 163 பேரும், தென்காசி மாவட்டத்தில் 28 பேரும் கரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: ஆசிரியை கணவர் பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

SCROLL FOR NEXT