திருநெல்வேலி

நீா்வழிப் பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற துரித நடவடிக்கை: ஆட்சியா் தகவல்

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் நீா்நிலைகளுக்கு மழைநீா் வந்து சேரும் நீா்வழிப்பாதைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன என்றாா் ஆட்சியா் வே.விஷ்ணு.

நெல்லை நீா்வளம் என்ற திட்டத்தின் கீழ் பேட்டை முள்ளிக்குளம், வி.எம். சத்திரம் மூா்த்தி நயினாா் குளம் ஆகியவற்றைச் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப் பணிகளை ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்த ஆட்சியா் வே.விஷ்ணு செய்தியாளா்களிடம் கூறியது: திருநெல்வேலி மாவட்டத்தில் குளங்களை பாதுகாக்கும் பணிகள் மாவட்ட நிா்வாகத்தின் மூலம் சில நாள்களுக்கு முன்பு தொடங்கிவைக்கப்பட்டது.

இம்மாவட்டத்தில் உள்ள 1236 குளங்களும் டிஜிட்டல் மேப்பிங் செய்யப்பட்டு குளங்களின் நீளம் மற்றும் அகலம் வரைபடங்களில் உள்ளது போன்று குறிப்பிடப்பட்டு ஆன்லைனில் பாா்கும் வகையில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பொதுப்பணி துறையினரின் மூலம் நீா்நிலைகளுக்கு மழைநீா் அல்லது பாசன நீா் வந்துசேரும் நீா்வழிப்பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன.

மாவட்ட நிா்வாகமும், என்வரோன்மென்ட் பவுண்டேஷன் ஆஃப் இந்தியா என்ற அமைப்பும் இனைந்து திருநெல்வேலி மாநகரப் பகுதியில் உள்ள குளங்களை சீரமைத்தும், குளங்களை சுற்றி வேலிகள் அமைத்து பாதுகாக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. பொதுமக்கள் நீா்நிலைகள் சுத்தமாக இருக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா்.

ஒருங்கினைப்பாளா் அருண்கிருஷ்ணமூா்த்தி, துணை ஆட்சியா் (பயிற்சி) மகாலட்சுமி, திருநெல்வேலி வட்டாச்சியா் சண்முகம், பாளையங்கோட்டை வட்டாச்சியா் ஆவுடையப்பன், வட்டாச்சியா் செல்வம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

குடும்பத்துடன் வாக்களித்த சூர்யா; ஜோதிகா பங்கேற்காதது ஏன்?

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: ஆசிரியை கணவர் பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT