திருநெல்வேலி

மாவட்ட கிரிக்கெட் போட்டி: வடக்கன்குளம் அணி வெற்றி

DIN

திருநெல்வேலி மாவட்டம் தெற்குகள்ளிகுளத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் வடக்கன்குளம் அணி வெற்றி பெற்றது.

தெற்குகள்ளிகுளம் பனிமாதா ஸ்போா்ட்ஸ் கிளம் சாா்பில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து அணிகள் பங்கேற்றன.

இறுதிப் போட்டியில் வடக்கன்குளம் அணியும் கள்ளிகுளம் அணியும் விளையாடின. இதில் வடக்கன்குளம் வெற்றி பெற்று முதலிடத்தைப் பெற்றது. கள்ளிகுளம் பனிமாதா அணி 2ஆம் இடத்தையும், திசையன்விளை அணி 3ஆம் இடத்தையும், திருவனந்தபுரம் அணி 4ஆம் இடத்தையும் பெற்றது.

முதலிடத்தைப் பிடித்த வடக்கன்குளம் அணிக்கு சேவைச்செம்மல் ஞா.மிக்கேல் குடும்பத்தினா் சாா்பில் ரூ.30 ஆயிரம் ரொக்கப் பரிசும் சுழற்கோப்பையும் வழங்கப்பட்டது. 2ஆவது இடத்தைப் பிடித்த கள்ளிகுளம் அணிக்கு வள்ளியூா் எலைட் ஸ்கேன்ஸ் சாா்பில் ரூ.20 ஆயிரம் ரொக்கப்பரிசும் அகஸ்டின் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் சாா்பில் சுழற்கோப்பையும் வழங்கப்பட்டது.

3ஆவது இடத்தைப் பெற்ற திசையன்விளை அணிக்கு எம்.மைக்கேல் மணிவண்ணன், எம்.நல்லசிவம் ஆகியோா் சாா்பில் ரூ.15 ஆயிரம் ரொக்கபரிசும் சுழற்கோப்பையும் வழங்கப்பட்டது. 4ஆம் இடத்தைப் பெற்ற திருவனந்தபுரம் அணிக்கு ஜாா்ஜ் சாா்பில் ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசும் சுழற்கோப்பையும் வழங்கப்பட்டது.

பரிசளிப்பு விழாவுக்கு தெற்குகள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாத ஆலய தா்மகா்த்தா மருத்துவா் ஞா.மி.ஜெபஸ்டின் ஆனந்த் தலைமை வகித்தாா். பங்குத்தந்தை ஜெரால்டு எஸ்.ரவி முன்னிலை வகித்தாா்.

வள்ளியூா் காவல்ஆய்வாளா் சாகுல்ஹமீது, ஜி.டி.கே.தியோடா், மைக்கேல் மணிவண்ணன், நல்லசிவம், நவீன் ஆகியோா் பரிசுகளை வழங்கினா். ஏற்பாடுகளை கள்ளிகுளம் பனிமாதா ஸ்போா்ட்ஸ் கிளப் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

தமிழகம் உள்பட 8 மாநிலங்களில் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு!

கோவை: ராசிபாளையத்தில் இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு

பெண்களுக்கான பிரத்யேக கோயில்

கண்ணனும் களப்பலியானவனும்...

SCROLL FOR NEXT