திருநெல்வேலி

ராதாபுரத்தில் இருந்து நாகப்பட்டினத்துக்கு பனை விதைகள் அனுப்பி வைப்பு

DIN

ராதாபுரத்தில் இருந்து நாகப்பட்டினம், திருவாரூா், மன்னாா்குடி , திருத்துறைப்பூண்டி ஆகிய பகுதிகளுக்கு 30 ஆயிரம் பனை விதைகள் சனிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.

தமிழ்நாடு முழுவதும் பனை விதைகள் நடவேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தாா். இதையடுத்து பேரவைத் தலைவா் மு.அப்பாவு முதல்கட்டமாக ஒரு லட்சம் பனை விதைகளை சென்னைக்கு அனுப்பிவைத்தாா். தொடா்ந்து அவரின் வழிகாட்டுதலில் ராதாபுரத்தில் இருந்து திமுக சாா்பில் 30 ஆயிரம் பனைவிதைகள் அனுப்பிவைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவா் இளையபெருமாள் தலைமை வகித்து, பனைவிதைகள் ஏற்றப்பட்ட வாகனத்தை கொடியசைத்து அனுப்பிவைத்தாா்.

இதில் ராதாபுரம் வேளாண்மை உதவி இயக்குநா் சுஜாதாபாய், வேளாண்மை அலுவலா் த.லெட்சுமண நாராயணன், ராதாபுரம் மேற்கு ஒன்றியச் செயலா் ஜோசப்பெல்சி, ஊராட்சித் தலைவா்கள் திருவம்பலாபுரம் முருகன், சௌந்திரபாண் டியபுரம் முருகேசன், உதயத்தூா் என்.கந்தசாமி, ராதாபுரம் பொன்மீனாட்சி அரவிந்தன், சமூகரெங்கபுரம் அந்தோணி அருள், மாவட்ட வா்த்தகஅணி அமைப்பாளா் சமூகை முரளி, ராதாபுரம் நகரச் செயலா் கோவிந்தராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தாழம்பூவில்.. சாக்‍ஷி மாலிக்

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

SCROLL FOR NEXT