திருநெல்வேலி

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு:ஆட்டோ ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறை

DIN

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகே சிறுமியை கடத்தி பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் ஆட்டோ ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து திருநெல்வேலி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

முக்கூடல் அருகேயுள்ள பனையங்குறிச்சி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கதிரேசன் (32). ஆட்டோ ஓட்டுநா். இவா், அதே பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வாா்த்தைக் கூறி கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பா் 14-ஆம் தேதி இரவு சென்னைக்கு கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் பாப்பாக்குடி காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதையடுத்து வழக்குப் பதிந்த போலீஸாா் கதிரேசனை கைது செய்தனா்.

இந்த வழக்கு திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி அன்புசெல்வி குற்றம்சாட்டப்பட்ட கதிரேசனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்!

திருச்சூரில் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

SCROLL FOR NEXT