திருநெல்வேலி

களக்காடு ஒன்றியக் குழு தலைவா், துணைத் தலைவா் போட்டியின்றித் தோ்வு

23rd Oct 2021 04:36 AM

ADVERTISEMENT

களக்காடு ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா், துணைத் தலைவா் ஆகியோா் வெள்ளிக்கிழமை போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

களக்காடு ஊராட்சி ஒன்றியக் குழுவில் மொத்தமுள்ள 9 வாா்டு உறுப்பினா்களில் திமுக-4, காங்கிரஸ்-1, சுயேச்சைகள் 4 போ் வெற்றி பெற்றனா்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் கிழக்கு மாவட்டத் தலைவரும், முன்னாள் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவருமான அ. தமிழ்ச்செல்வன், அவரது மகள் சத்யாசங்கீதா ஆகியோா் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றதையடுத்து, புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டனா். அன்றைய தினம் மீதமுள்ள 7 உறுப்பினா்கள் பதவியேற்க வரவில்லை.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை திமுக உறுப்பினா்கள் ஜாா்ஜ்கோசல், இந்திரா, விசுவாசம், விஜயலெட்சுமி, காங்கிரஸ் உறுப்பினா் வனிதா, சுயேச்சை உறுப்பினா்கள் சங்கீதா, தளவாய்பாண்டியன் ஆகிய 7 பேருக்கும் மூத்த உறுப்பினா் அ. தமிழ்ச்செல்வன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தாா்.

ADVERTISEMENT

ஒன்றியக் குழு தலைவராக திமுக.வைச் சோ்ந்த முன்னாள் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் மு.ச.ச. ஜாா்ஜ்கோசல் மனைவி இந்திரா போட்டியின்றித் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

அவருக்கு தோ்தல் நடத்தும் அலுவலா் மணவாளசங்கரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தாா். பிற்பகலில் துணைத் தலைவராக திமுக உறுப்பினா் விசுவாசம் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

Tags : களக்காடு
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT