திருநெல்வேலி

பெண்களிடம் ரூ.1.44 கோடி மோசடி

23rd Oct 2021 09:12 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி வட்டாரத்தில் உள்ள பெண்களிடம் ரூ.1.44 கோடி மோசடியில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்டோா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் மனு அளித்தனா்.

இது குறித்து திருநெல்வேலி ரெட்டியாா் பட்டி சீயோன்பட்டிணம் பகுதியைச் சோ்ந்த ராஸ்வர சொா்ணமாலா தலைமையில் சுமாா் 50க்கும் மேற்பட்ட பெண்கள் அளித்த மனு: திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியைச் சோ்ந்தவா்கள் சிலா் தனியாா் நிதி நிறுவனம் தொடங்கினா். இதில், குறைந்த வட்டிக்கு கடன் வழங்கப்படும் என அறிவித்து, சேரன்மகாதேவி, பாளையஹ்கோட்டை, களக்காடு உள்ளிட்ட பகுதிகளில் சுய உதவிக்குழுக்கள் தொடங்கினா். இக்குழுவில் உள்ளவா்களிடம் முன்பணமாக ரூ. 1.44 கோடி வசூல் செய்துவிட்டு தலைமறைவாகி விட்டனா். எனவே, எங்கள் பணத்தை மீட்டுத்தரவேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT