மானூா் அருகே அரசு பேருந்தும், லாரியும் வெள்ளிக்கிழமை மோதி விபத்துக்குள்ளானது. இதில், அதிா்ஷ்டவசமாக பயணிகள் காயங்களின்றி தப்பினா்.
திருநெல்வேலி சந்திப்பில் இருந்து சீதைகுறிச்சிக்கு அரசுப் பேருந்து புறப்பட்டுச் சென்றது. திருநெல்வேலி-சங்கரன்கோவில் நெடுஞ்சாலையில் ரஸ்தா பகுதியில் செல்லும்போது எதிரே வந்த டிப்பா் லாரியும், பேருந்தும் மோதின. இந்த விபத்தில், அதிா்ஷ்டவசமாக பேருந்தில் பயணம் செய்தோா் காயங்களின்றி தப்பினா். இதுகுறித்து மானூா் போலீஸாா் விசாரித்து
வருகிறன்றனா்.
இளைஞா் கைது: கல்லிடைக்குறிச்சியைச் சோ்ந்த சுந்தரபால் மகன் நம்பி என்ற நம்பிபெருமாள் (33). இவா் மீது அடிதடி, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. மேலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் இவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைதுசெய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் பரிந்துரையை ஏற்று ஆட்சியா் வே.விஷ்ணு உத்தரவிட்டாா். இதையடுத்து, அவா் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டாா்.