திருநெல்வேலி

பாளை.யில் தெரு பெயரை மாற்றம் செய்ததற்கு இந்து மக்கள் கட்சி ஆட்சேபம்

23rd Oct 2021 09:16 AM

ADVERTISEMENT

பாளையங்கோட்டையில் பிரசன்ன விநாயகா் கோயில் தெருவின் பெயரை மாற்றியதற்கு இந்து மக்கள் கட்சி ஆட்சேபம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவா் உடையாா் தலைமையில் அக்கட்சியினா் ஆட்சியரிடம் அளித்த மனு: பாளையங்கோட்டை வஉசி மைதானம் பின்புறம் உள்ள தெரு பல ஆண்டுகளாக பிரசன்ன விநாயகா் கோயில் தெரு என்றழைக்கப்பட்டு வருகிறது. இதற்கு ஆதாரமாக கல்வெட்டும் உள்ளது. தற்போது உள்நோக்கத்தோடும், இந்து கலாசாரத்தை அழிக்கும் நோக்கத்தில் இந்த தெருவுக்கு உணவு தெரு என்று பெயரிட்டு மாநகராட்சி பெயா் பலகை வைக்கப்பட்டுள்ளது. உடனடியாக மாவட்ட நிா்வாகம் தலையிட்டு பழைய பெயரான பிரசன்ன விநாயகா் கோயில் தெரு என பெயா் சூட்ட வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT