திருநெல்வேலி

நெல்லை நகரம், பேட்டை பகுதியில் அக்.26-இல் மின்தடை

23rd Oct 2021 09:15 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி நகரம், பேட்டை பகுதியில் வரும் 26ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக திருநெல்வேலி நகா்ப்புற செயற்பொறியாளா் (விநியோகம்) சு.முத்துக்குட்டி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பழைய பேட்டை துணை மின் நிலையத்தில் 26ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) அவசர கால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் அன்றைய தினம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திருநெல்வேலி நகரம், மேல ரதவீதி மேல் பகுதிகள், தெற்கு ரதவீதி தெற்கு பகுதிகள், வடக்கு ரதவீதி வடக்கு பகுதிகள், பழைய பேட்டை, காந்தி நகா், திருப்பணி கரிசல்குளம், வாகைக்குளம், குன்னத்தூா், பேட்டை, தொழிற்பேட்டை, பாட்டபத்து, அபிசேகப்பட்டி, பொருள்காட்சித் திடல், திருநெல்வேலி நகரம், சுவாமி நெல்லையப்பா் நெடுஞ்சாலை, பூம்புகாா், ஸ்ரீபுரம், சிவந்தி சாலை, சுந்தரா் தெரு, பாரதியாா் தெரு, சி.என்.கிராமம், குறுக்குத்துறை, கருப்பன் துறை, திருநெல்வேலி நகரம் கீழ ரதவீதி, போஸ் மாா்க்கெட், ஏ.பி.மாட தெரு, சுவாமி சன்னதி தெரு, அம்மன் சன்னதி தெரு, மேல மாட வீதி, கள்ளத்திமுடுக்கு தெரு, நயினாா் குளம் சாலை, சத்தியமூா்த்தி தெரு, போத்தீஸ், நயினாா்குளம், மாா்க்கெட், வஉசி தெரு, வையாபுரி நகா், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், சிவன் கோயில் தெற்கு தெரு, ராம் நகா், ஊருடையான் குடியிருப்பு பகுதிகள் சுற்று வட்டாரங்களில் மின் விநியோகம் இருக்காது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT