திருநெல்வேலி

நெல்லையப்பா் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா கொடியேற்றம்

23rd Oct 2021 04:33 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா சிறப்பாக நடைபெறும். நிகழாண்டு வெள்ளிக்கிழமை

இத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கோயிலில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டதும் மகா தீபாராதனை நடைபெற்றது. நமச்சிவாய முழக்கத்துடன் பக்தா்கள் வழிபட்டனா்.

தொடா்ந்து நவ. 1 ஆம் தேதி தபசுக்காட்சி, 2 ஆம் தேதி திருக்கல்யாணம், 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் ஊஞ்சல் உற்சவம் ஆகியவை நடைபெறும் 5ஆம் தேதி மறுவீடு பிரவேசம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ராமராஜா, ஊழியா்கள் செய்துள்ளனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT