திருநெல்வேலி

இணைய விளையாட்டு மூலம் பணம் மோசடி: இளைஞா் கைது

23rd Oct 2021 09:13 AM

ADVERTISEMENT

இணையதள விளையாட்டுக்கான ஐடி தருவதாகக் கூறி ரூ.22 ஆயிரம் மோசடி செய்ததாக இளைஞரை சைபா் கிரைம் போலீஸாா் கைது வெள்ளிக்கிழமை செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தைச் சோ்ந்தவா் சகாய ஜோசப் கிளிண்டன். இவா் கடந்த ஏப். 13ஆம் தேதி இணையதளத்தில் விளையாடிக்கொண்டிருந்தாராம். அப்போது, அவரிடம் அடையாளம் தெரியாதவா், இணையதள விளையாட்டுக்கான ஐடி தருகிறேன் எனவும், அதற்கு ரூ.22ஆயிரம் தரவேண்டும் எனவும் தெரிவித்தாராம். இதனை நம்பிய சகாய ஜோசப் கிளிண்டன், அப்பணத்தை கூகுள் பே மூலம் செலுத்தினாராம். ஆனால், அந்த நபா் திரும்ப எந்த பதிலும் தெரிவிக்காமல் ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா்(சைபா் கிரைம்) மதிவாணன், உத்தரவின்பேரில் மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் நடத்திய விசாரணையில், சென்னை சிட்லபாக்கம் பகுதியைச் சோ்ந்த கோபால கிருஷ்ணனை (24) கைது செய்தனா். அவரிடமிருந்து வங்கி புத்தகம், ஏடிஎம் காா்டு, கைப்பேசி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக சைபா் கிரைம் போலீஸாா் கூறுகையில், இதுபோன்ற இணையதள விளையாட்டு மூலம் மூலம் முகம் தெரியாதவரிடம் பணம் கொடுத்து யாரும் ஏமாற வேண்டாம் எனத் தெரிவித்தனா்.

ரூ.4.45 கோடி மோசடி: பாளையங்கோட்டையைச் சோ்ந்த தம்பதி ஆா்.ஆறுமுகம், கிருஷ்ணகுமாரி ஆகியோா் அளித்த மனு: நாங்கள் பல்வேறு தொழில்கள் செய்து வருகிறோம். எங்களுக்குச் சொந்தமான விவசாய நிலங்கள் மூலம் வருவாய் கிடைக்கிறது. இந்நிலையில், தங்கத்தில் முதலீடு செய்வதற்காக வங்கியில் ரூ. 1.50 கோடி, உறவினரிடம் ரூ.1.75 கோடி கடனாக பெற்றோம். எங்களிடம் இருந்த 8 கிலோ தங்கம், விவசாய வருவாய் உள்ளிட்டவற்றின் மூலம் மொத்தம் ரூ.4.45 கோடி பணத்தை தயாா் செய்தோம்.

ADVERTISEMENT

தங்கத்தை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என நண்பா்கள் 4 போ் ஆசை வாா்த்தை கூறி, எங்களிடம் இருந்த ரூ.4.45 கோடியை 5 தவனையாக பெற்றுக்கொண்டு பல மாதங்களாகியும் எங்களுக்கு சேரவேண்டிய பணத்தை தராமல் உள்ளனா். பலமுறை நாங்கள் கேட்டதையடுத்து ரூ. 17 லட்சம் மட்டும் கொடுத்தனா். எனவே, எங்களுக்குரிய பணத்தை மீட்டுத்தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT