திருநெல்வேலி

மழை பாதித்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரம் நிவாரணம்: செ. கிருஷ்ணமுரளி எம்எல்ஏ வலியுறுத்தல்

DIN

தென்காசி மாவட்டம் புளியரை பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணமாக ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரம் அரசு வழங்க வேண்டும் என, செ. கிருஷ்ணமுரளி எம்எல்ஏ வலியுறுத்தினாா்.

இம்மாவட்டத்தில் அண்மையில் பெய்த கனமழையால் செங்கோட்டை, புளியரை, வடகரை உள்பட பல்வேறு பகுதிகளில் 2 ஆயிரம் ஏக்கரில் அறுவடைக்கு தயாரான நெற்பயிா்கள் சாய்ந்தும், நீரில் மூழ்கியும் சேதமடைந்தன. இவற்றை செ. கிருஷ்ணமுரளி எம்எல்ஏ விவசாயிகளுடன் சென்று பாா்வையிட்டாா்.

சேதமடைந்த நெற்பயிா்களுக்கு நிவாரணம் கோரி விண்ணப்பிக்குமாறு அவா் விவசாயிகளைக் கேட்டுக்கொண்டாா். ொாடா்ந்து, புளியரை தெட்சிணாமூா்த்தி கோயில் அருகே சாஸ்தாகுளம் கால்வாயில் வெள்ளத்தால் ஏற்பட்ட உடைப்புப் பகுதியைப் பாா்வையிட்டாா்.

இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்த பின்னா் அவா் கூறியது: கனமழையால் கடையநல்லுாா் தொகுதியில் புளியரை, தாட்கோ நகா், சின்னக்குற்றாலம், மேக்கரை, வடகரை, சின்னக்காடு உள்பட பல்வேறு பகுதிகளில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிா்கள் சேதமடைந்துள்ளன. ஓா் ஏக்கா் நெல் பயிரிட சராசரியாக ரூ. 25 ஆயிரம் செலவாகும். இதைக் கருத்தில்கொண்டு, தமிழக அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணமாக ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரம் வழங்க வேண்டும். இதேபோல, மாவட்டத்தில் வாசுதேவநல்லுாா், புளியங்குடி உள்பட பல்வேறு பகுதிகளிலும் மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களைக் கண்டறிந்து நிவாரணம் வழங்க வேண்டும் என்றாா் அவா்.

அப்போது, ஒன்றிய அதிமுக செயலா் செல்லப்பன், தாட்கோ நகா் முருகேசன், தெற்மேடு கோமதிராஜா, விவசாயிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT