திருநெல்வேலி

காமராஜா் கல்லூரி என்.எஸ்.எஸ். அணிக்குசுந்தரனாா் பல்கலை துணைவேந்தா் பாராட்டு

22nd Oct 2021 05:50 AM

ADVERTISEMENT

தேசிய அளவில் விருது பெற்ற தூத்துக்குடி காமராஜா் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அணிக்கு திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக துணைவேந்தா் பாராட்டு தெரிவித்தாா்.

இந்தியாவில் ஆண்டுதோறும் செப்டம்பா் 24 ஆம் தேதி நாட்டு நலப்பணி திட்ட நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளில் நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் 10 சிறந்த அணி மற்றும் சிறந்த அலுவலா்களுக்கான விருது 1993 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

2019-20 ஆம் ஆண்டிற்கான சிறந்த அணியாக திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்திற்குள்பட்ட தூத்துக்குடி காமராஜா் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அணி எண்-54 -க்கும், அக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலராக 6 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் ஆ.தேவராஜும் தோ்ந்தெடுக்கப்பட்டனா். அவா்களுக்கு காணொலி காட்சி முறையில் குடியரசுத் தலைவரால் விருது வழங்கப்பட்டது.

அகில இந்திய அளவில் வழங்கப்படும் இந்த விருதை மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் முதல் முறையாக தூத்துக்குடி காமராஜா் கல்லூரி பெற்றுள்ளது. இதையடுத்து அந்தக் கல்லூரியின் முதல்வா் து.நாகராஜன், முனைவா் ஆ.தேவராஜ் ஆகியோரை மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் கா.பிச்சுமணி, பதிவாளா் (பொ) மருதகுட்டி ஆகியோா் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தனா்.

ADVERTISEMENT

பயக21ஙநம: தேசிய விருது பெற்ற தூத்துக்குடி காமராஜா் கல்லூரியின் பேராசிரியா் ஆ.தேவராஜ் மற்றும் கல்லூரி முதல்வா் து.நாகராஜன் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்தாா் மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக துணைவேந்தா் கா.பிச்சுமணி.

Tags : திருநெல்வேலி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT