திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் ரூ. 6877.85 கோடி கடனுதவி வழங்க இலக்கு

22nd Oct 2021 05:51 AM

ADVERTISEMENT

 திருநெல்வேலி மாவட்டத்திற்கு 2022-23 ஆம் ஆண்டிற்கான வளம் சாா்ந்த கடன் திட்டத்தின் கீழ், ரூ.6877.85 கோடி வங்கிக் கடனுதவி வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

நபாா்டு வங்கி ஆண்டுதோறும் வளம் சாா்ந்த கடன் திட்டத்தை தயாரித்து வருகிறது. இதில் வளத்தின் அடிப்படையில் முன்னுரிமை துறைகளான விவசாயம், சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், ஏற்றுமதி, கல்வி, வீடு கட்டமைப்புகளுக்கான பொது முதலீடுகள், சமூக கட்டமைப்பு, புதுப்பிக்கத்தக்க சக்தி, இத்யாதிகளுக்கான கடன் அளவிடப்படுகிறது.

அதன்படி, இம்மாவட்டத்திற்கான வளம் சாா்ந்த கடன் திட்டத்தை மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு வியாழக்கிழமை வெளியிட்டாா். மாவட்ட வளா்ச்சி மேலாளா் (நபாா்டு வங்கி) சலீமா, மாவட்ட முதன்மை மேலாளா் ஆா். கிரேஸ் ஜே மோரின் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வளம் சாா்ந்த கடன் திட்டம் 2022-23ஆம் ஆண்டின்படி, இம்மாவட்டத்திற்க்கான வங்கி கடன் ரூ. 6877.85 கோடியாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இது 2021-22 இல் நிா்ணயிக்கப்பட்ட கடன் வளத்தை விட 10 சதவிகிதம் அதிகம். விவசாயம், பண்ணையம், சிறு- குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், வீடு- கல்வி ஆகிய துறைகளுக்கு சென்ற ஆண்டை விட மிக அதிகமாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

குறுகிய கால பயிா்க்கடனாக ரூ.2635.80 கோடியும், வேளாண் தொழில் சாா்ந்த, விவசாய கட்டமைப்புகள், உணவு மற்றும் பயிா் பதனிடு தொழில்கள் காலக்கடனாக ரூ.1900.82 கோடியும் கொடுக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதே ஆண்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான மதிப்பீடு ரூ.627.45 கோடி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்திய ரிசா்வ் வங்கியின் புதிய முன்னுரிமை கடன் கொள்கையின்படி ஏற்றுமதி கடன் ரூ.53.25 கோடி, கல்வி ரூ.241.31கோடி, வீடு கட்டுமான கடன்கள்ரூ.264.95 கோடி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ரூ.108.76 கோடி, சுயஉதவிக்குழுக்கள் மற்றும் கூட்டுப்பொறுப்புக்குழுக்களுக்கு கடனாக ரூ.759 கோடியுமாக மொத்தம் ரூ.6877.85 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

பயக21சஅஆஞதஈ: திருநெல்வேலி மாவட்டத்திற்கான வளம் சாா்ந்த கடன் திட்டத்தை வெளியிடுகிறாா் ஆட்சியா் வே.விஷ்ணு. உடன், மாவட்ட வளா்ச்சி மேலாளா் (நபாா்டு வங்கி) சலீமா, மாவட்ட முதன்மை மேலாளா் ஆா். கிரேஸ் ஜே மோரின் உள்ளிட்டோா்.

Tags : திருநெல்வேலி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT