திருநெல்வேலி

அரசு போக்குவரத்து ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

22nd Oct 2021 05:50 AM

ADVERTISEMENT

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பணியாளா் சம்மேளம் சாா்பில், திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில், தீபாவளி போனஸ் மற்றும் முன்பணம் உடனடியாக வழங்க வேண்டும்; ஓய்வு பெற்ற பணியாளா்களின் அகவிலைப்படி உயா்வை ஒப்பந்த உயா்வுடன் சோ்த்து வழங்க வேண்டும்; ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை உடனே தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்திற்கு, சம்மேளன பொருளாளா் ஏ.ராஜாஜி தலைமை வகித்தாா். துணைச் செயலா் மந்திரமூா்த்தி, துணைத்தலைவா் பேச்சிமுத்து உள்ளிட்டோா் விளக்கிப் பேசினா். நிா்வாகிகள் ராமசந்திரன், உத்தரம், சந்தானம், ஜெயராஜ், முத்துகிருஷ்ணன்உள்பட பலா் பங்கேற்றனா்.

படவரி பயக21பதஅச:

ADVERTISEMENT

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்துக் கழக ஊழியா்கள்.

Tags : திருநெல்வேலி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT