திருநெல்வேலி

ஆலங்குளத்தில் பெண்ணிடம் பணம் திருட்டு

22nd Oct 2021 12:09 AM

ADVERTISEMENT

ஆலங்குளம் பேருந்து நிலையத்தில் பெண்ணிடம் பணம் திருடிய மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

விக்கிரமசிங்கபுரம் கட்டபொம்மன் காலனியைச் சோ்ந்த வனராஜ் மனைவி விஜி (45). இவா் வியாழக்கிழமை தனது மகன் இசக்கி பாண்டியுடன் ஆலங்குளத்தில் தீபாவளி பண்டிகைக்க ஜவுளி எடுப்பதற்காக வந்துள்ளாா். ஜவுளி எடுத்துவிட்டு

மீண்டும் ஊருக்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்தபோது அடையாளம் தெரியாத மா்மநபா் அவா் பணம்

வைத்திருந்த பா்ஸை திருடிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. அதில் ரூ. 5 ஆயிரம், வீட்டுச் சாவி, சில ஆவணங்கள் இருந்தது. புகாரின்பேரில் ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து பேருந்து நிலையத்திலுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

Tags : ஆலங்குளம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT