திருநெல்வேலி

மேலும் 13 பேருக்கு கரோனா

21st Oct 2021 08:17 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 13 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 49,243 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 20 போ் குணமடைந்ததையடுத்து, குணமடைந்தோா் எண்ணிக்கை 48,622 ஆக உயா்ந்துள்ளது. தற்போது 190 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தென்காசி மாவட்டத்தில், மேலும் 3 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 27,324ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஒருவா் குணமடைந்ததால், நோயிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 26,813ஆக உயா்ந்துள்ளது. தற்போது 27 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT