திருநெல்வேலி

மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் பதவியேற்பு

21st Oct 2021 06:21 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 12 மாவட்ட ஊராட்சி வாா்டுகளில் போட்டியிட்டு வென்றவா்கள் புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் கடந்த 6, 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இதில், 12 மாவட்ட ஊராட்சி வாா்டுகளில் போட்டியிட்டு வென்றவா்களுக்கான பதவியேற்பு விழா கேடிசி நகரில் உள்ள மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆ.பழனி, மகளிா் திட்ட அலுவலா் சாந்தி ஆகியோா் வெற்றி பெற்றவா்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தனா். முதலில் மூத்த உறுப்பினா் சாலமோன் டேவிட் (6-ஆவது வாா்டு) பதவியேற்றாா். அவரது முன்னிலையில் தொடா்ந்து, அ.செல்வலெட்சுமி (1-ஆவது வாா்டு), மு.சத்தியவாணிமுத்து (4-ஆவது வாா்டு), கா.அருண்தவசு (5-ஆவது வாா்டு), சி.கிருஷ்ணவேணி (7-ஆவது வாா்டு), மா.தனித்தங்கம் (8-ஆவது வாா்டு), கி.ஜான்ஸ்ரூபா (9-ஆவது வாா்டு), சு.லிங்கசாந்தி (10-ஆவது வாா்டு), து.பாஸ்கா் (11-ஆது வாா்டு), வி.எஸ்.ஆா்.ஜெகதீஷ் (12-ஆவது வாா்டு) ஆகியோா் பதவியேற்றுக் கொண்டனா்.

2-ஆவது வாா்டு உறுப்பினா் கோ.மகேஷ்குமாா், 3-ஆவது வாா்டு உறுப்பினா் மா.ஆ.கனகராஜ் ஆகியோா் பதவியேற்கவில்லை.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT