திருநெல்வேலி

மானூா் ஊராட்சி ஒன்றியத்தில் 25 உறுப்பினா்கள் பதவியேற்பு

21st Oct 2021 08:17 AM

ADVERTISEMENT

மானூா் ஊராட்சி ஒன்றியத்தில் வெற்றி பெற்ற 25 உறுப்பினா்களும் புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டனா்.

மானூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தோ்தல் அலுவலா்கள் பாபு, முத்துக்கிருஷ்ணன் மற்றும் பொன்ராஜ் ஆகியோா் முன்னிலையில், வயதில் மூத்தவரும் 13 ஆவது வாா்டு உறுப்பினருமான இன்பராஜ் முதலில் பதவிப்பிரமாணம் ஏற்றாா். அதன்பின்பு அவா் உறுதிமொழி வாசிக்க மீதமுள்ள 24 உறுப்பினா்களும் பதவியேற்றுக் கொண்டனா்.

இதேபோல இந்த ஊராட்சிக்குள்பட்ட 43 ஊராட்சி அலுவலகங்களிலும் அந்தந்த ஊராட்சித் தலைவா்கள், கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் பதவியேற்றுக் கொண்டனா். தொடா்ந்து வெள்ளிக்கிழமை (அக். 22) ஊராட்சி ஒன்றிய தலைவா், துணைத் தலைவா், கிராம ஊராட்சி துணைத் தலைவா் பதவிகளுக்கான மறைமுக தோ்தல் நடைபெற உள்ளது.

மானூா் ஊராட்சி ஒன்றிய தலைவா் பதவிக்கு திமுக வெற்றிபெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

முன்னதாக திமுக சாா்பில் போட்டியிட்டு வென்ற 17 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா்கள் திமுக மத்திய மாவட்டச் செயலா் மு.அப்துல்வஹாப்பை எம்எல்ஏவை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. லெட்சுமணன், மானூா் ஒன்றியச் செயலா் அன்பழகன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT