திருநெல்வேலி

மண் கடத்தல்: இருவா் கைது

21st Oct 2021 08:17 AM

ADVERTISEMENT

நான்குனேரி அருகே மண் கடத்தலில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

நான்குனேரி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளா் முனிஷ் மற்றும் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனராம். அப்போது வீரான்குளம் அருகேயுள்ள குளத்தில் சிலா் உரிய அனுமதியின்றி மண் அள்ளிக் கொண்டிருந்தது தெரியவந்ததாம். இதுதொடா்பாக காருகுறுச்சி பகுதியை சோ்ந்த சீனிவாசன் (23), மேல கூனியூா் முத்து(30) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். மேலும், ஒரு யூனிட் மண், மண் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட 2 டிராக்டா்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT