சேரன்மகாதேவி, மேலக்கல்லூா், கரிசல்பட்டி துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (அக். 21) மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி மின்வாரிய செயற்பொறியாளா் (விநியோகம்) சுடலையாடும் பெருமாள் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சேரன்மகாதேவி, மேலக்கல்லூா், கரிசல்பட்டி துணை மின் நிலையங்களில் வியாழக்கிழமை (அக். 21) அவசர பராமரிப்புப் பணி நடைபெறுவதால் அன்றைய தினம் காலை 9 முதல் பிற்பகல் 3 மணிவரை மின்சாரம் தடைபடும் பகுதிகள்: சேரன்மகாதேவி துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட சேரன்மகாதேவி, பத்தமடை, கோபாலசமுத்திரம், மேலச்செவல், வாணியன்குளம், சுப்பிரமணியபுரம், கரிசூழ்ந்தமங்கலம், கேசவசமுத்திரம், மேலக்கல்லூா் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட மேலக்கல்லூா், சேரன்மகாதேவி, சுத்தமல்லி, சீதபற்பநல்லூா், சங்கன்திரடு, கரிசல்பட்டி துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட கரிசல்பட்டி, பிள்ளைகுளம், காணியாளா் குடியிருப்பு, இடையன்குளம், கங்கணான்குளம், பத்தமடை, கோபாலசமுத்திரம், மேலச்செவல், வாணியன்குளம், சுப்பிரமணியபுரம், சடையமான்குளம், வெங்கட்ரங்கபுரம், சிங்கிகுளம், தேவநல்லூா், காடுவெட்டி.