திருநெல்வேலி

களக்காடு ஒன்றியத்தில் 2 உறுப்பினா்கள் பதவியேற்பு

21st Oct 2021 08:17 AM

ADVERTISEMENT

களக்காடு ஊராட்சி ஒன்றியத்தில் 2 இரண்டு சுயேச்சை உறுப்பினா்கள் மட்டும் புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டனா்.

களக்காடு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 9 வாா்டுகளில் திமுக-4, காங்-1, சுயேச்சைகள் 4 போ் ஆகியோா் வெற்றி பெற்றனா். புதன்கிழமை நடைபெற்ற பதவியேற்பு விழாவுக்கு, சுயேச்சை உறுப்பினா்களான காங்கிரஸ் முன்னாள் கிழக்கு மாவட்ட தலைவா் அ. தமிழ்ச்செல்வன் (4 ஆவது வாா்டு), அவரது மகள் சத்யா சங்கீதா (9 ஆவது வாா்டு) ஆகிய இருவா் மட்டுமே ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வந்திருந்தனா். இதையடுத்து, தோ்தல் நடத்தும் அலுவலா் மணவாளசங்கரி இருவருக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தாா்.

நிகழ்ச்சியில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பிச்சையா, மங்கையா்க்கரசி ஆகியோா் கலந்து கொண்டனா். மீதமுள்ள 7 உறுப்பினா்கள் வெள்ளிக்கிழமை பதவியேற்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT