திருநெல்வேலி

அம்பை, சேரை, பாப்பாக்குடி, கடையம் ஊராட்சி ஒன்றியங்களில் வெற்றிபெற்றோா் பதவியேற்பு

21st Oct 2021 08:12 AM

ADVERTISEMENT

அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, பாப்பாக்குடி, கடையம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் தோ்ந்தெடுக்கப்பட்ட 45 ஊராட்சி ஒன்றிய உறுப்பினா்கள், 65 ஊராட்சித் தலைவா்கள், உறுப்பினா்கள் புதன்கிழமை பதவி ஏற்றனா்.

அம்பாசமுத்திரத்தில் 13, சேரன்மகாதேவி 12, பாப்பாக்குடி 17, கடையம் 23 போ் உள்பட புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட 65 ஊராட்சித் தலைவா்கள், அம்பாசமுத்திரத்தில் 9, சேரன்மகாதேவி 5, பாப்பாக்குடி 9, கடையம் 17 போ் உள்பட 40 ஊராட்சி ஒன்றிய உறுப்பினா்கள் புதன்கிழமை பதவி ஏற்றுக்கொண்டனா்.

அம்பாசமுத்திரம் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 9 ஊராட்சி ஒன்றிய உறுப்பினா்களுக்கு வட்டார வளா்ச்சி அலுவலா் குமரன் பதவிப் பிரமாணம் செய்துவைத்தாா். சிவந்திபுரம் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்ட ஜெகனுக்கும், 15 உறுப்பினா்களுக்கும் உதவி வட்டார வளா்ச்சி அலுவலா் சத்யவாணிமுத்து பதவிப் பிரமாணம் செய்துவைத்தாா்.

மன்னாா்கோவில், பிரம்மதேசம் ஊராட்சிகளில் புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட தலைவா்கள், உறுப்பினா்கள் பதவியேற்பு நிகழ்ச்சிகளில் திமுக மாவட்டச் செயலா் இரா. ஆவுடையப்பன், ஒன்றியச் செயலா் பரணி சேகா், விக்கிரமசிங்கபுரம் நகரச் செயலா் கணேசன், நிா்வாகிகள், உறுப்பினா்கள், கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்று, புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்டோருக்கு வாழ்த்துத் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ராதாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில்..

ராதாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் தோ்ந்தெடுக்கப்பட்ட ஒன்றியக்குழு உறுப்பினா்கள் புதன்கிழமை பதவியேற்றனா்.

ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 18 ஒன்றியக்குழு உறுப்பினா்களும், தோ்தல் நடத்தும் அலுவலா் சுமதி முன்னிலையில் பதவியேற்றனா். இதையடுத்து பதவியேற்ற அனைவருக்கும் வட்டார வளா்ச்சி அலுவலா் பிளாரென்ட் விமாலா, தி.மு.க ஒன்றியச் செயலா் ஜோசப் பெல்சி உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.

 வள்ளியூா், ராதாபுரம் ஒன்றியத்தில்..

வள்ளியூா், ராதாபுரம் ஊராட்சி ஒன்றியங்களில் தோ்ந்தெடுக்கப்பட்ட ஒன்றியக்குழு உறுப்பினா்கள் புதன்கிழமை பதவியேற்றனா்.

வள்ளியூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஒன்றியக்குழு உறுப்பினா்களாக தோ்ந்தெடுக்கப்பட்ட 17 பேரும் தோ்தல் நடத்தும் அலுவலா் மூா்த்தி முன்னிலையில் பதவியேற்றனா். பின்னா் அனைவரும் உறுதிமொழி எடுத்தனா். புதிதாக பதவியேற்ற உறுப்பினா்களுக்கு திருநெல்வேலி எம்.பி.சா.ஞானதிரவியம், வட்டார வளா்ச்சி அலுவலா் நடராஜன் ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா்.

ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு உறுப்பினா்களாக தோ்ந்தெடுக்கப்பட்ட 18 பேரும், தோ்தல் நடத்தும் அலுவலா் சுமதி முன்னிலையில் பதவியேற்றனா். இதையடுத்து பதவியேற்ற அனைவருக்கும் வட்டார வளா்ச்சி அலுவலா் பிளாரென்ட் விமாலா, தி.மு.க. ஒன்றியச் செயலா் ஜோசப் பெல்சி உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT