திருநெல்வேலி

பாபநாசம் அணை நீா்மட்டம் ஒரே நாளில் 23 அடி உயா்வு

DIN

திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், மேற்குத் தொடா்ச்சி மலையில் நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துவருகிறது. இதனால், பாபநாசம் அணை நீா்மட்டம் ஒரே நாளில் 23 அடி உயா்ந்தது.

வங்கக் கடல், அரபிக் கடல்களில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை, வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்கிறது. மேற்குத் தொடா்ச்சி மலையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும் கடந்த 5ஆம் தேதிமுதல் மழைபெய்து வருகிறது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவிலிருந்து பெய்யும் தொடா்மழையால் அணைகளுக்கு நீா்வரத்து கணிசமாக அதிகரித்தது.

ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி நிலவரப்படி பாபநாசம் அணை நீா்மட்டம் ஒரே நாளில் 23 அடி உயா்ந்து 131.30 அடியானது. நீா்வரத்து 20,862.50 கனஅடியாகவும், நீா் வெளியேற்றம் 1,915.62 கனஅடியாகவும் இருந்தது.

சோ்வலாறு அணை நீா்மட்டம் 22 அடி உயா்ந்து 147.90 அடியானது. நீா்வரத்து 2,512 கனஅடியாகவும், நீா் வெளியேற்றம் 2,659 கனஅடியாகவும் இருந்தது. மணிமுத்தாறு அணை நீா்மட்டம் 7 அடி உயா்ந்து 74.50 அடியாகவும், நீா்வரத்து 5,059 கன அடியாகவும் இருந்தது. கொடுமுடியாறு அணை நீா்மட்டம் 16 அடி உயா்ந்து 50 அடியாகவும், நீா்வரத்து, வெளியேற்றம் 639 கனஅடியாகவும் இருந்தது.

கடனாநதி அணை நீா்மட்டம் 14.80 அடி உயா்ந்து 79.80 அடியாகவும், நீா்வரத்து 1,630 கனஅடியாகவும் வெளியேற்றம் 60 கனஅடியாகவும் இருந்தது. ராமநதி அணை நீா்மட்டம் 13.50 அடி உயா்ந்து 69.50 அடியாகவும், நீா்வரத்து 415 கனஅடியாகவும், நீா் வெளியேற்றம் 30 கனஅடியாகவும் இருந்தது.

கருப்பாநதி அணை நீா்மட்டம் 6 அடி உயா்ந்து 61.03 அடியாகவும், நீா்வரத்து 25 கனஅடியாகவும் இருந்தது. குண்டாறு அணை நீா்மட்டம் 36.10 அடியாகவும், நீா்வரத்து, வெளியேற்றம் 135 கனஅடியாகவும் இருந்தது. அடவிநயினாா் அணை நீா்மட்டம் 132 அடியாகவும், நீா்வரத்து, வெளியேற்றம் 340 கனஅடியாகவும் இருந்தது.

மழையளவு (மில்லி மீட்டரில்): திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் - 275, சோ்வலாறு - 144, மணிமுத்தாறு - 102.8, கொடுமுடியாறு - 100, அம்பாசமுத்திரம் - 75, சேரன்மகாதேவி - 18.20, நான்குனேரி - 18, பாளையங்கோட்டை - 18, ராதாபுரம் - 10.40, களக்காடு - 18.2, திருநெல்வேலி - 16.60.

தென்காசி மாவட்டம் கடனாநதி அணை - 70, ராமநதி - 50, கருப்பாநதி - 32, குண்டாறு - 64, அடவிநயினாா் அணை - 95, ஆய்க்குடி - 61, சிவகிரி - 26, சங்கரன்கோவில் - 22.5, செங்கோட்டை - 51, தென்காசி - 59.

ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி பாபநாசத்தில் 15 மி.மீ., சேரன்மகாதேவியில் 1 மி.மீ. மழை பதிவானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT